சில நேரங்களில் காத்திருப்பும் தவறுதான்!
- Iniyaval Rajini
- Mar 27, 2023
- 1 min read
80 வயதை தொட்ட பெரும் ஆளுமை, அருட்தந்தை ஆனந்த் அமலதாஸின் இன்றளவும் நிறுத்தாமல் எழுதிக்கொண்டிருக்கும் வேகம் என்னை கொஞ்சம் ஆட்டம் காண செய்தது. அதுவும், அந்த புத்தகத்தை படிச்சதும், அதன் தேவை எவ்வளவு என்று புரிந்ததும்...நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற ஆற்றாமை என்னுள் வந்தது. செயலாற்றிக்கொண்டே இருப்பவனே மனிதன். யாரோ ஒருவரின் அனுமதிக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் காத்திருக்கும் மனோபாவம் தவறு என்று ஆணித்தரமாக உணர ஆரம்பித்து வெகு நாள் ஆகிவிட்டபோதும், காத்திருப்பின் நிறைவு நாளாகவே இந்த நாள் அமைந்தது. காலம் நிற்காது. மனதில் நிற்பவை, நாம் செய்த செயல்களின் நினைவே என்ற புரிதலோடு, எனக்கென்ற ஒரு பாதை...நான் மட்டுமே முடிவு செய்த பாதையில் பயணிக்க துணிவுடன் நான்.
Middle Class Mentality Disorder என்று தான் நினைக்கிறன். எல்லாவற்றிற்கும் அனுமதி கேட்பது! நம்மால் யாருக்கும் எந்த சிரமும் வந்துவிடக்கூடாது என்ற கவனம்.











Comments