இனவெறி எது?
- Iniyaval Rajini
- Mar 27, 2023
- 2 min read
"ரஜினி ma'am, எப்பவுமே உங்க ஆளுமையை ரொம்ப ரசிச்சிருக்கேன். உங்க நிர்வாக திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன். உங்ககிட்ட எப்பவுமே ஒரு நேர்மை இருக்கும். எல்லார்கிட்டேயேயும் பாகுபாடு இல்லாம பழகுவீங்க. உங்க சிரிச்ச முகம் எங்களுக்கு ஒரு motivation தரும்.
ஏன் மாறுனீங்க? இப்பலாம் இனவாதம் பேசுறீங்க. கஷ்டமாயிருக்கு. உங்ககிட்டயிருந்து நான் இதை சத்தியமா எதிர்பார்கல." - இப்படி என்னோடு வேலை செய்த நண்பர்.
*என்னுடைய பதில்.
நான் - உங்ககிட்ட ஒரு கிண்ணம் சோறுதான் இருக்கு. அது உங்களுக்கும், உங்க பிள்ளைக்கும் வச்சிருக்கீங்க. திடீர்னு, யாரோ ஒரு குழந்தை எனக்கும்னு கேட்குது. நீங்க என்ன செய்வீங்க.
அவர் - கொஞ்சம் குடுப்பேன்.
நான் - அப்ப உங்க ரெண்டு பேர் பசி தீராதே?
அவர் - என்னுடையதை மட்டும் கொடுப்பேன்.
நான் - நல்லது. நீங்க சோறு குடுக்கிறீங்க தெரிஞ்ச உடனே, அந்த குழந்தை இன்னொரு குழந்தைய கூட்டிட்டு வருது. சோறு குடுப்பீங்களா?
அவர் - (யோசிக்கிறார்) எப்படி கொடுக்கமுடியும்? என் குழந்தைக்கு இருக்காதே.
நான் - அட...அதுவும் குழந்தை தாங்க. மனசாட்சி இல்லாம கொடுக்கமாட்டேன்னு சொல்றீங்க.
அவர் - என் பிள்ளைக்கு சோறு கொடுக்கறதுதானே என் கடமை. அது தானம் தானே?
நான் - உங்க பிள்ளைகள் சோறு குடுக்கமாடீங்க...ஆன அவனுக்கான நிலம், அரசியல், வேலை வாய்ப்பு, மொழி எல்லாத்தயும் கொடுப்பீங்க ல.
கொஞ்சம் அரண்டுட்டார். உங்க பிள்ளைக்கு சோறு கொடுக்கனும்னு நினைக்கிறது எவ்வளவு முக்கியமோ...அவ்வளவு முக்கியம் நில, அரசியல் உரிமையும் விட்டுட்டு போகணும்.
மற்ற இனத்தவர் வாழக்கூடாதுனு நினைக்கல. முல்லை பெரியாறு, காவேரி, கெயில், ஸ்டெர்லிட், கூடங்குளம், ஹிந்தி, மாநில சுயாட்சி பறிப்பு, தெலுங்கர் சட்டசபை-முதலமைச்சர், நீட், மார்வாடி தொழில் ஆக்கிரமிப்பு, அரசு வேளையில் 50% தெலுங்கர், மலையாளிகள் கோலோச்சும் டீ கடை, நகை கடை...இப்படி பல. நமக்கு போக அவங்களும் வாழட்டும். பிரச்சனை இல்ல. நமக்கானதை எப்படி கொடுக்கமுடியும்?
மத்தில ஹிந்திக்காரனுக்கும், மாநிலத்துல தெலுங்கனுக்கும் அடிமையா தானே இருக்கோம். இதை நீங்க மறுக்கமுடியுமா?
Dravidian Stock என்று சொல்லும் ஸ்டாலின் உங்களுக்கு பெருசா தெரியரார். உன் ரத்தம், என் அண்ணன் சீமான், உங்களுக்கு கோமாளியா தெரியரார்.
அடிமை ரத்தம் நமக்குள்ள ஊறிடிச்சு இல்ல?
உடைச்சு வாங்க. என்னுடையது வெறுப்பு இல்ல. பாதுகாப்பு உணர்வு. என் சந்ததியர்க்கு என்னுடைய கடமை!
நான் மாறல bro. நான் இனவாதம் பேசல. இனஉரிமை, இன மீட்பு பேசுறேன். இன்னொரு ஈழம் இங்க உருவானா, நாம எங்க போவோம். நம் பிள்ளைகளை சாக கொடுக்கமுடியுமா?
குடிக்கு, ஒரு நல்ல அரசு துணை போகுமா? என் மக்கள் சீரழியறத பார்க்க என்னால முடியல. அறிவு சமூகம், தன்மானமற்ற பிச்சைக்கார சமூகமாக மாறிடுச்சே. வலிக்கலையா? எனக்கு ரொம்ப வலிக்குது.
அவன் ... Dravidian Stock மாற்றாந்தாய்.
"எனக்கு என் தாய், எங்கள் தாயுமானவன், அண்ணன் சீமான் தான் அரியணை ஏறணும். அது ஒரு ஏக்கம். சொல்லமுடியாத ஒரு ஏக்கம். 800 வருட அடிமைத்தனத்தை விட்டு வரவேண்டி, பெரும் ஏக்கம். என் ரத்தவன், எங்களை பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஏக்கம்."
I will do anything that is right...for it! Any problem Bro...???
ANY PROBLEM FRIENDS???











Comments